பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 இந்தக் காம நோயாகிய பயிர், இவ்வூரிலிருக்கின்ற பெண்கள் துற்றிப் பேசுகின்ற-அவரானது. எருவாக, அது கேட்டு மிகவும் கோபித்துத் தன் தாய் பேசுகின்ற கடுஞ் சொல் தண்ணீராக வளர்ந்து வருகிறது. (காதலி கூறியது) 8. (நெய்யால் நெருப்பினை அவித்தல் போன்றது.) நெய்யால் எளிதுதுப் பேம் என்றற்ருல் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல். [1148] ஊரார் துாற்றிப் பேசுதலால் (அலரால்) காமத்தினை அவித்து விடுவோம் என்று எண்ணுதல், நெய்யினைப் பெய்து நெருப்பினை அவிப்போம் என்று கூறுதற்குச் சமமாகும். 9. (காதலன் பிரிந்திருப்பது கண்டு அவள் வருந்திக் கூறியது.1 அலர்தான ஒல்வதோ அஞ்சல்ஓம்பு என்ருர் பலர் நாண நீத்தக் கடை. II 1497 எம்மைக் கண்ட நாளில் காதலர், அஞ்சாதே! உன்னை விட்டுப் பிரியேன் என்ற உறுதி மொழி கூறிஞர். அப்படிப் பட்டவரே இன்று பலரும் நாணமுறும் வகையில் நம்மை விட்டு நீங்கி இருக்கின்றர். ஆதலால், அன்னியர் தூற்று கின்ற அலருக்கு நாம் நாணமடைவதில் பொருளுண்டோ? 10. (காதலர் இருவரும் பிறர் அறியாமல்-உடன்போக்கு -வெளியூர் செல்லும் சிந்தனை குறிக்கப்பட்டது.) தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும் இவ் ஊர். [11501 உடன்போக்கிற்கு உதவியாக இருக்கும் கவ்வையினை (துாற்றிப் பேசுதல்) இவ்வூர் தானுகவே எடுக்கின்றது. இனி மேல் நம்முடைய காதலர் நாம் வேண்டி விரும்பினுல், தாமும் உடன்போக்கிற்கு உடன்படுவார். ஆதலால் இந்த அலர் தன்மையாய் வந்தது. (காதலி இவ்வாறு கூறினுள்.)