பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ö 3 கற்பியல் 113. பிரிவு ஆற்றுமை 1. (பிரிந்து விரைவில் வருவேன் என்ற நாயகனுக்குக் கூறியது.) செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை. Ր11511 நீங்கள் எம்மை விட்டுப் பிரியாதிருப்பீர்களேயானல் எனக்கு அச்செய்தியினைச் சொல்லுங்கள். அதுவல்லாமல், பிரிந்து போய் விரைவில் வந்து விடுவேன் என்ற செய்தியினை நீங்கள் வரும்போது உயிர் வாழ்ந்திருப்பவர்க்குச் சொல் லுங்கள். (பிரிந்து நாயகி உயிர் வாழ்தல் இயலாதென்ப தாம்.) 2. (நாயகன் பிரிவான் என்பதை நாயகி குறிப்பால் உணர்ந்து சொன்னது.) இன்கண் உடைத்து அவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு. [1152յ இப்போது பார்ப் பதற்கு நாயகனுடைய பார்வை நமக்கு இனிமை பயப்பதாகத்தான் இருக்கின்றது. ஆனல் புணர்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது, அப்புணர்ச்சி பிரிவர் என்று அஞ்சுகிற அச்சத்தினை உடையதாக இருந்தது. 3. (நாயகன் அன்பினைத் தெரிந்தறிதல் இயலாதாயிற்று. ) அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவு ஓர் இடத்து உண்மை யான். [1153յ பிரியேன்” என்ற சொல்-சொல்லினையும், பிரிதலையும் தாங்கிக் கொள் ளாத நாயகியின் நிலைமையினை அறிந்திருக் கும் காதலரிடத்தும், ஒரு நேரத்தில் உண்டாதலால், அவர் நம்மீது நிறைந்த அன்புடையவராக இருக்கின்ருர் என்று தெரிந்து கொள்ள முடியாததாகின்றது.