பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv ஆரியிடப்பட்டன. அந்தக் காலத்தில் தமிழ் மாநாடுகள் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. சிறுசிறு நூல்களாகிய என்னுடைய நூல்கள் மக்களிடையே விரைவாகவும் எளிமையாகவும் பரவுவதற்கு வசதியாக விருந்தன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிடப்பட்ட சிறுசிறு நூல்களின் தொகுப்புகளை நண்பர்களின் விருப்பப் படி இப்போது வெளியிடுகிறேன். அவைகளில் ஒன்றுதான் இந்த நூலும் ஆகும். 1935ஆம் ஆண்டில் தொடங்கிய திருக்குறள் பரப்பும் பணியானது அடியேனல் விரைவாகச் செய்யப்பட்டு மக்க ளிடையே திருக்குறள் பற்றினை வேரூன்றச் செய்தது. திருக் குறள் விழிப்புணர்ச்சி விரைந்து வளர அடியேன் வித்திட் டேன் என்று பணிவோடு சொல்வதில் பெருமையடை கின்றேன். இதன் காரணமாகத்தான் தமிழ்ப்புலமை பெற்ற சான்ருேர்கள், பேராசிரியர்கள் எல்லாம் திருக்குறள் சம்பந்தமான நூல்களை எழுதி வெளியிட ஆரம்பித்தார்கள். ஆதலால்தான் திருக்குறள் சம்பந்தமாக வெளியிடப்பட்ட பேரறிஞர்களின் நூல்களெல்லாம் பெரும்பாலும் இந்த நாற்பதாண்டுகளுக்குள்ளாகவே இருக்கும் என்பதனைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். திருக்குறள் பரப்பும் பணியினைக் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கி பெரும்பணி ஆற்றுவ தற்குப் பெருந்துணையாக இருந்த நகரம் திருச்சிமாநகர மாகும். திருச்சியில் 1948ஆம் ஆண்டு முதல் 1952 வரை (அதாவது டில்லி நாடாளு மன்றத்திற்கு நான் உறுப்பின கைச் சென்ற ஆண்டு 1952) குறள் மலர்' என்ற வார இத ழினைத் திருக்குறள் தொண்டிற்காகவே நடத்திவந்தேன். இந்த இதழ் மிக விரைவாகவும் பலத்த ஆதரவுடனும் தமிழர்களிடையே வளர்ந்துவந்தது. பிறகு கடலூரில்