பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 4. நாயகி தன்மீது தவறில்லை என்ருள்.) அளித்துஅஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு. நாங்கள் சந்தித்த அந்த நாளிலேயே, அன்பு காட்டி 'உன்னை விட்டுப் பிரியேன்” என்று கூறிய அவரே பிரிதல் செய்வாராயின் அவரால் உணர்த்தப்பட்ட சொற்களை உண்மையென்று நம்பிய என் மீது குற்றம் உண்டாக முடி யுமோ? [11541 5. (இதுவும் அது.1 ஒம்பின் அமைந்தார் பிரிவுஓம்பல் மற்று அவர் நீங்கின் அரிதால் புணர்வு. [1155] என்னுடைய உயிர் நீங்காமல் காப்பாற்ற நினைப்பாயா யின் அவ்வுயிர்க்கு உரியவரான நாயகர் பிரிந்து செல்லுவ தைத் தடுத்து நிறுத்துவாயாக அப்படித் தடுப்பாரின்றி அவர் பிரிந்து செல்லுவாராயின், என்னுடைய உயிரும் போகும். பிறகு நாயகருடன் கூடுதல் அரிதாகும். (நாயகி தோழியிடம் இவ்வாறு கூறினுள்.) 6. (நாயகன் பிரிவினைக் கூறிய தோழிக்கு நாயகி சொன்னது.) பிரிவு உரைக்கும் வன்கண்ண ராயின் அரிது.அவர் நல்குவர் என்னும் நசை. [1156]

பிரிவினைத் தாங்க மாட்டாள் நாயகி என்ற உண்மை யினைத் தெரிந்திருக்கும் நாயகரே, பிரிகின்ற செய்தியினைக் கூறும் அன்பில்லாதவராக ஆன பிறகு, நாம் வருந்துவதை அறிந்து வந்து அன்பு செய்வார் என்ற ஆசை விடப்பட வேண்டியதாகும்.