பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 7. (வளையல்கள் உணர்த்துகின்றன.) துறைவன் துறந்தமை துற்ருகொல் முன்கை இறை இறவா நின்ற வளை. [1157] என்னுடைய தலைவன்-நாயகன் (துறைவன்) என்னைப் பிரிந்து செல்லப் போகின்ருர் என்ற செய்தியினை அவர் அறிவிக்காமலேயே, என் முன்கையினின்றும், கழலுகின்ற -வளையல்கள் எனக்கு அறிவிக்காதோ? உடல் மெலிவால் வளையல்கள் கழலும். வருத்தத்தால் உடல் மெலியும். 8. (மகளிர்க்குத் துன்பம் தருபவை.) இன்னது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும் இன்னது இனியார்ப் பிரிவு. [1158] மகளிர்க்குத் தங்கள் குறிப்பறிந்து நடக்கின்ற தோழி யர்கள் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பம் தருவதாகும். அதனைவிடத் துன்பம் தருவது, இனிய தம் காதலரைப் பிரிந்திருப்பது என்பதாம். 9. (காமத் தீயின் தன்மை கூறியவாறு. 1 தொடின்சுடின் அல்லது காமநோய் போல விடின்சுடல் ஆற்றுமோ தீ. [1159] நெருப்பானது தன்னைத் தொட்டால்தான் சுடும் தன்மை கொண்டது. காம நோயினைப் போல, தன்னை விட்டு நீங்கினல் சுடுகின்ற ஆற்றல் அந்த நெருப்புக்கு உண்டோ? 10. (பொறுத்திருக்க இயலாது என்கிருள் நாயகி.) அரிதுஆற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவு ஆற்றிப் பின் இருந்து வாழ்வார் பலர். [1160] தி-5