பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 118. கண் விதுப்பு அழிதல் 1. (இந்த நோய் எப்படி அவளுக்கு வந்தது.) கண்தாம் கலுழ்வது எவன்கொலோ தண்டாநோய் தாம் காட்ட யாம்கண் டது. [1171յ தீராத இக்காம நோயினை நாம் அறிந்தது எவ்வாறு? தாம் (கண்கள்) காதலரைக் காட்டியதா லன்ருே! அன்றைய தினம் அவைகள் (கண்கள்) செய்து, இன்று காதலரைக் காட்டச் சொல்லி அழுகின்றன; எதை நினைத்து? (இவ்வாறு நாயகி பேசினுள்.) 2. (கண்கள் செய்த தவறு.) தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்பது எவன். - [1 172] பின்னல் இப்படி நடக்கக்கூடும் என்பதனை ஆராய்ந்தறி யாமல் அன்றைய தினம் காதலரைப் பார்த்த மையுண்ட என்னுடைய இந்தக் கண்கள் நம்மால்தானே இத்துன்பம் வந்ததென்று அறிந்துகொள்ளாமல் இப்போது துன்பப் படுவது ஏனே? 3. (இது நகைப்புக்கு இடமானது-நாயகி கூறுவது.) கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும் இது நகத் தக்கது உடைத்து. [1173] இந்தக் கண்கள் அன்று நாயகரைத் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுது கொண்டிருக்கின்றன. இந்த அறியாமையால் நடைபெறுகின்ற செயல் நாம் பார்த்துச் சிரிக்கத்தக்க தன்மையினே உடையதாக இருக்கின்றது. 4. (நீர் வற்றுகிற அளவுக்கு அழுகின்றன.1 பெயல் ஆற்ரு நீர் உலர்ந்த உண்கண் உய ல் ஆற்ரு உய்வில்நோய் என் கண் நிறுத்து. լ:1174]