பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 இந்த மை தீட்டப்பெற்ற என்னுடைய கண்கள் நான் தப்பிக்க முடியாத ஒழிவில்லாத காம நோயினை என்னிடத் தில் நிறுத்திவிட்டு, தாமும் அழ முடியாத அளவுக்கு கண் களில் நீர் வற்றிவிட்ட நிலையினை அடைந்து விட்டன. 5. (காம நோயினைச் செய்த கண்கள்.) படல் ஆற்ரு பைதல்உழக்கும் கடல் ஆற்ருக் காமநோய் செய்தஎன் கண். [1175] பெரிய கடலும் சிறிதாகும் வண்ணம் பெரிய காம நோயினை எனக்குச் செய்த என்னுடைய கண்கள் தாமும் துரங்க முடியாத நிலையினை அடைந்து துன்பத்தினை அனுப வித்துக் கொண்டிருக்கின்றன. (இவ்வாறு நாயகி கூறினுள்.) 6. (கண்களின் அவல நிலை.) ஓஒ இனிதே எமக்கு இந்நோய் செய்தகண் தாஅம் இதன்பட் டது, [1176] எமக்கு இந்தக் காமநோயினே உண்டாக்கிய என்னுடைய கண்கள் தாமும் தூங்காமல் அழுதுகொண்டே இருக்கும் நிலையில் உள்ளன. இந்த நிலைமை மிகவும் இனிதாக இருக் கின்றது. - 7. (நீர் முழுதும் வற்றிப் போகிறது.) உழந்துழந்து உண்ணிர் அறுக விழைந்து இழைந்து வேண்டி அவர்க்கண்ட கண். - է1177յ உள்ளம் உருகி மிகவும் விரும்பி வேண்டி அன்று காத லரைக் கண்டு மகிழ்ந்த கண்கள், இப்போது தூங்காமல் அழுகின்ற துன்பத்தினை நிறைய அனுபவித்து தம்முன் இருக் கின்ற நீர் அற்றுப் போவதாகுக. (நாயகி பேசியது.)