பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 என்னை விரும்பிக் கேட்ட நாயகர்க்குப் பிரிவை அப்போது உடன்பட்டு இசைந்தேன். பிரிவினைத் தாங்க முடியாமல் இப்போது பசலை நிறம் அடைந்தேன். இப்படிப்பட்ட என் னுடைய பண்பான தன்மையினை யாரிடம் சொல்லுவேன்? 2. (உடம்பில் பசப்பு நிறம் பரவுதல்.) அவர் தந்தார் என்னும் தகையால் இவர் தந்து என் மேனிமேல் ஊரும் பசப்பு. [1 1821 இந்தப் பசப்பு நிறமானது காதலராகிய அவர் உண் டாக்கி விட்டார் என்னும் மகிழ்ச்சி மிகுதியினலே என்னு டைய உடம்பின்மீது ஏறி ஊர்ந்து செல்லுகின்றது. 3. (அழகும் நாணமும் போயிற்று.) சாயலும் நானும் அவர்கொண்டார் கைம்மாரு நோயும் பசலையும் தந்து. [1183] பிரிந்து செல்லும்போதே என்னுடைய உடம்பு அழகினை யும் நாணத்தினையும் அவர் கொண்டு சென்ருர். அந்த இரண்டிற்கும் கைம்மாருக இந்த்க் காம நோயினை யும் பசலை நிறத்தினையும் தந்தார். . 4. (பசலை நிறம் வந்தது-வஞ்சனையானது.) உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர் திறமால் கள்ளம் பிறவோ பசப்பு. [1184] நான் காதலரின் சொற்களை மனத்தில் நினைத்துக் கொண்டே இருக்கின்றேன். அவருடைய நற்குண நற்செயல் களேயே என்னுடைய வாயில்ை சொல்லிக்கொண்டே இருக் கின்றேன். அப்படி இருந்தும் இந்தப் பசலை நிறம் கள்ளத் தனமாக வந்தது-வஞ்சனையாக இருக்கின்றது. -