பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 3 5. (பசலை நிறம் ஊர்கின்றது.) உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண் என் மேனி பசப்பு:ஊர் வது. [1185] அந்தக் காலத்தில் என்னுடைய நாயகர் என்னை விட்டுப் பிரிந்து செல்வாராக; எனது உடம்பு பசலை நிறம் அடைவது இங்கே யன்ருே? அப்படிப்பட்டது இப்போது வேறு மாதிரி யாகுமோ? 6. (பசப்பு நிறம் வருகின்ற நேரம்.) விளக்குஅற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு. [l 186] எரிகின்ற விளக்கினது சோர்வினைப் பார்த்து நெருங்கி வருகின்ற இருளினைப்போல இந்தப் பசலை நிறம் நாயகரது புணர்ச்சியின் சோர்வு பார்த்து நெருங்கி வருவதாகும். முயக்கம் என்பது தழுவியிருப்பதைக் குறிப்பதாகும். 7. (அள்ளிக்கொள்ளும் பசப்பு.) புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக் கொள் வற்றே பசப்பு. [1187] முன்னொரு நாள் நாயகரைத் தழுவிக் கொண்டிருந் தேன். அப்போது அறியாமல் சிறிது விலகினேன். அவ் வாறு விலகிய அந்த அளவிலே இந்தப் பசலை நிறமானது அள்ளிக்கொள்ளப்படும் பொருளினைப்போல என்மீது வந்து நிறைந்து விட்டது. 8. (நாயகன் பிரிந்ததைக் கூறுவதில்லை.) பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளைத் துறந்தார் அவர்என்பார் இல், [1 1881 இவள் பசலை நிறம் அடைந்து விட்டாள். துன்பத் தினைப் பொறுத்திருக்க முடியவில்லை என்பதாக என்னைப்