பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 2. (மழையும் மகளிர் இன்பமும்.) வாழ்வார்க்கு வானம் பயந்தற்ருல் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி. - t 1192] தம்மை விட்டுப் பிரிந்திருக்க இயலாத இன்ப மகளிர்க்கு அக்காதலியை விட்டு நீங்கி இருக்க முடியாத கணவர் கால மறிந்து வந்து செய்கின்ற அன்புச் செயல் தன்னையே நோக்கி உயிர் வாழ்கின்ற மக்களுக்கு மழையானது காலமறிந்து அள வறிந்து வந்து பெய்வது போன்றதாகும். 3. (நாயகன் அன்பு நாயகிக்கு உயர்ச்சி.1 விழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழு நம் என்னும் செருக்கு. [11 931 தம்மால் இன்பத்துடன் விரும்பப்படுகின்ற நாயகரால் விரும்பப்படுகின்ற நாயகி.மார்களுக்கு, பிரிந்த கணவர் விரைவில் வருவார் இன்புற்றுத் திளைப்போம்'- என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற பெருமிதம் பொருத்தமான தாகும். 4. (கற்புடை மகளிர் பாராட்டும் நாயகி) விழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின். [1194] கற்புடைய பெண்களாலே நன்கு மதிக்கப்படுவாரும், தம்மால் இன்பத்துடன் விரும்பப்படுகின்ற கணவரால் அன் புடன் விரும்பப்படாராயின் அப்படிப்பட்டவர்கள் தீவினை யுடையவர்களே ஆவார்கள். 5. (காதலரும் அன்பு செய்தல் வேண்டும்.) நாம்காதல் கொண்டார் நமக்குஎவன் செய்யவோ தாம்காதல் கொள்ளாக் கடை. . [11 95]