பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மாலே இன்பமாக காதல் கொள்ளப்பட்ட கணவர், நமக்கு என்ன இன்பத்தினைச் செய்ய முடியும்? நம்மைப் போலவே தாமும் (கணவரும்) நம்மிடத்தில் காதல் செய் யாதபோது (நாயகி இவ்வாறு கூறினள்.) 6. (காவடிப் பாரமும் காமமும்.) ஒருதலையான் இன்னது காமம்காப் போல இருதலை யானும் இனிது. [11961 காமம் நிறைந்த காதலர்கள் இருவரிடையேயும் இன்ப வேகம் இருத்தல் வேண்டும். அப்படியில்லாமல் ஒருவரிடத் தில் மட்டும் உண்டாகுமானுல் அது துன்பம் செய்வதாகும். காவடித் தண்டுக்கு இரண்டு பக்கங்களிலும் ஒத்த பாரம் இருப்பது போல இருவரிடத்தில் காமம் ஒத்திருக்குமாயின் அது மிகவும் இன்பம் செய்வதாகும். 7. (காமன் இவ்வாறு செய்தல் சரியல்ல.) பருவரலும் பைதலும் காணுன்கொல் காமன் ஒருவர்கண் நின்ருெழுகு வான். [1 197] காம இன்பத்திற்குரிய இருவரிடத்திலும் ஒத்து இல் லாமல், ஒருவரிடத்தில் மட்டும் இருந்துகொண்டு வேதனை தருபவளுகிய காமன், பசப்பில்ை உண்டான நோயினையும் துன்பத்தின் மிகுதியையும் அறிந்திருக்க மாட்டானே? 8. (இனிய சொல்லுக்கு ஏக்கம்.) வீழ்வாரின் இன்சொற் பெரு.அது உலகத்து வாழ்வாரின் வன்களுர் இல். [1198] தம்மால் காதலிக்கப்படும் இன்ப நாயகரிடத்திலிருந்து ஒர் இனிய சொல்லினைக்கூட பெருமல் பிரிவு துன்பத்தினைப் பொறுத்து உயிர் வாழ்கின்ற பெண்களைப் போல மனத் திடம் உள்ளவர்கள் உலகத்தில் இல்லையென்ப தாகும்.