பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 9. (அவருடைய சொற்களே இன்பம் தரும்.) நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு. [1199] எம்மால் காதலிக்கப்பட்ட நாயகராகிய என் கணவர் எனக்கு அன்பு காட்டாதவரானலும், அவரிடமிருந்து வரு கின்ற எந்தச் சொல்லும் என் காதுகளுக்கு இன்பத்தினைச் செய்வதாகும். 10. (நெஞ்சுடன் காதலி சொன்னது.1 உருஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செருஅஅய் வாழிய நெஞ்சு, [1200] நெஞ்சமே! உன்னுடன் அன்பால் பொருந்தாத நாயக ருக்கு உன்னுடைய மிகுதியான காம நோயினைச் சொல்லு வதைவிட, அருமையான அச்செயலினை விட்டுவிட்டு உனக்குத் துன்பம் செய்கின்ற கடலினத் துார்க்க முயற்சி செய்வாயாக அது எளிதில் முடிந்து விடுவதாகும்! 121. நினைந்தவர் புலம்பல் 1. (பெருமகிழ்ச்சி தரும் காமம்.) உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது. [1201յ இன்பம் நுகர்ந்து பின்னர் பிரிந்திருக்கின்றபோதும் மனத்தாலே நுகர்ந்த இன்பத்தினை நினைத்துப் பார்த்தாலும் பெரிய இன்ப மகிழ்ச்சியினைத் தருவதால் உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தருகிற கள்ளினைவிட காமம் இன்பத் தினைத் தருவதாகின்றது. (நாயகன் இவ்வாறு கூறினன்.) 2. (நாயகியை மறவாதிருக்கும் நாயகன்.) எனைத்து ஒன்று இனிதேகாண் கரிமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல்' - [1202 յ