பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 & தம்மால் விரும்பப்படுகின்ற நாயகியைப் பிரிந்திருக் கின்றபோது நினைத்தால், அந்தப் பிரிவால் வருகின்றதொரு துன்பம் இல்லாததாகும். ஆகையில்ை காமம் எப்படியா யினும் இன்பம் தருவதொன்ருகத்தான் இருக்கின்றது. 3. (நாயகி தோழிக்குச் சொல்லியது.) நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினேப்பது போன்று கெடும். [1203յ எனக்குத் தும்மல் வருவது போலத் தோன்றி வராமல் போய் விடுகின்றது; வராமல் கெடுகின்றது. ஆகையில்ை என்னுடைய நாயகர் என்னை நினைப்பவர் போலிருந்து நினைக்காமல் இருத்தல் வேண்டும். 4. (எம் நெஞ்சத்திலேயே உள்ளார்.) யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எம்நெஞ்சத்து ஒஒ உளரே அவர். [I204] எம்முடைய நெஞ்சத்திடத்து எம் காதலர் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கின்ருர். அப்படியிருக்க, அவர் நெஞ்சிலும் யாமும் இருந்துகொண்டிருக்கின்ருேமோ? (நாயகன் இனியும் வராததால் நாயகி சொன்னது.) 5. (நாணமில்லாத நாயகரோ!) தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணுர்கொல் எம்நெஞ்சத்து ஒவா வரல். [1205] தம்முடைய (நாயகர்) நெஞ்சில் யாம் (நாயகி) செல்ல முடியாமல் காவல்கொண்ட நாயகர், என்னுடைய நெஞ் சுக்கு எப்போதும் - ஒழிவில்லாமல் வந்துகொண்டிருப்ப தற்கு நாணமடைவதில்லையோ?