பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 6. (நாயகி உயிருடன் இருப்பதற்குக் காரணம்.) மற்றுயான் என்னுளேன் மன்னே அவரொடுயான் உற்ற நாள் உள்ள உளேன். [1206] நான் நாயகருடன் சேர்ந்து இன்புற்ற நாட்களே நினைத் துக்கொண்டிருப்பதால் இப்பிரிவுத் துன்பத்திலும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன். அது இல்லாவிட்டால் வேறு எதனுல் நான் உயிர் வாழ்ந்துகொண்டிருப்பேன்? 7. (மறவாதிருப்பதினால் நன்மையுண்டு.) மறப்பின் எவனவன் மற்கொல் மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும். [1207] அந்த இன்பத்தினை மறக்காதவளாக இருக்கின்றேன். இப்போது நினைத்தாலும் பிரிவுத்துன்பம் உள்ளத்தினைச் சுட்டுவிடுகின்றது. அவ்வாறு தாங்கிக்கொள்ள முடியாத நான் மறப்பேனேயானல் எதனால் இறந்துபோகாமல் இருப் பேன் . 8. (எவ்வளவு நினைத்தாலும் நாயகர் கோபிக்கமாட் டார்.) எனைத்து நினைப்பினும் காயார் அனைத்து அன்ருே காதலர் செய்யும் சிறப்பு. [1208] என்னுடைய காதலர் நான் அவரை எவ்வளவு அதிக மாக நினைத்தாலும் கோபிக்கமாட்டார். காதலர் எனக்குச் செய்யும் இன்பமானது அத்தகைய பெருமையானதொன் றன்ருே? 9. (நாம் இருவரும் வேறுவேறல்ல.) விளியும்என் இன் உயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து, [1209]