பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 I தாங்கிக்கொண்டு பொறுத்திருக்கின்ற தன்மையினை நானே கூறுவேன். 3. (கனவில் காணுவதால் பயன்.) நனவின்ை நல்கா தவரைக் கனவின்ை காண்டலின் உண்டுஎன் உயிர். F1213] நனவில்-நினைவு நேரத்தில் வந்து அன்பு காட்டாத நாயகரைக் கனவில் காணுவதால் என்னுடைய உயிரானது நீங்காமல் இருக்கின்றது. 4. (கனவில் உண்டாகும் காமம்.) கனவின்ை உண்டாகும் காமம் நனவிஞன் நல்காரை நாடித் தரற்கு. [1214] நனவில் வந்து-நினைவு நேரத்தில் வந்து அன்பு செய் யாத காதலரை அவர் போயிருக்கிற இடத்திற்குத் தேடிச் சென்று கொண்டுவந்து தருதலால் அந்தக் கனவினுல் காம இன்பம் எனக்கு உண்டாவதாகின்றது. 5. (கனவினல் அடைகின்ற இன்பம்.1 நனவிஞன் கண்டது உம் ஆங்கே கனவும்தான் கண்ட பொழுதே இனிது . . . [1215] நினைவு காலத்தில் (நனவிளுல்) காதலரைக் கண்டு அனுபவித்த இன்பமும் அப்போது கண்ட நேரத்திலேயே இனிதாக இருந்தது. இப்போது கனவில் கண்டு அனுப வித்த இன்பமும் கண்டபொழுதே இன்பம் தருவதாக அமைந்தது. 6. (காதலர் நீங்காதிருக்க வழி.1 நனவுஎன ஒன்று இல்லை ஆயின் கனவின்ை காதலர் நீங்கலர் மன். தி-6 [1216]