பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8.3 இவ்வூரிலுள்ள பெண்கள் நனவினிடத்து (நினைவு காலம்) நம்மை விட்டுக் காதலர் நீங்கிவிட்டார் என்று நாயகர் மீது கொடுமை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். கனவினில் நாயகர் நீங்காமல் வந்துகொண்டிருப்பதைக் கண்டறிய மாட்டார்களோ? 123. பொழுது கண்டு இரங்கல் 1. (மாலைப் பொழுதினைப் பார்த்துச் சொன்னாள்.) மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்னும் . வேலை நீ வாழி பொழுது . [12211 மாலைப் பொழுதே ! நீ என்னுடன் நாயகர் இருந்த போது வந்த மாலைப் பொழுது அல்ல; காதலரைக் கூடி மகிழ்ந்த மகளிரது உயிரை உண்ணுகிற முடிவு காலமாய் இருந்தாய். 2. (மாலைப் பொழுதும் துன்பமடைந்துள்ளது.) புன்கண்ணே வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துனே. II 2.2.2] மயங்கிய மாலைப் பொழுதே! நீயும் எம்மைப்போல் ஒளியிழந்து காணப்படுகின்ருய் வாழ்வாயாக! உன்னுடைய துணைவரும் எம்முடைய துணைவரைப்போல இரக்கமில்லாத வரோ? - - 3. (இந்த நோய் அடக்க முடியாத தாயிற்று. பணி அரும்பிப் பைதல்கொள் மாலை துணி அரும்பித் துன்பம் வளர வரும். [1223յ நாயகர் என்னுடன் இருக்கும் நாட்களில் எல்லாம் என் முன் நடுக்கத்துடன் பசந்துவந்த இந்த மாலைப்பொழுதானது உயிர் வாழ்க்கையிலேயே எனக்கு வெறுப்பினை உண்டாக்கி