பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 44. குற்றம் கடிதல்

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து.

43?

இவறலும் மாண்புஇறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு 432

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். 433

குற்றமே காக்க பொருளாக் குற்றமே அற்றம் தரூஉம் பகை 434

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்துறு போலக் கெடும். 435

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்றம் ஆகும் இறைக்கு 436

செயற்பால செய்யாது இவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். 437

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன்று அன்று. 4.38

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை. 439

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல். 440