பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - அரசியல் 102

செயலில் வலிமையும், தன் வலிமையும், மாற்றானது வலிமையும், துணைசெய்வாரின் வலிமையும் ஆராய்ந்தே செயலைச் செய்ய வேண்டும். 47?

தன்னாலே முடியக்கூடியவனை ஆராய்ந்து அறிந்து, அச் செயலிலேயே நிலைத்துநின்று முயற்சி செய்பவர்களுக்கு முடியாத செயல் எதுவும் இல்லை. 472 தம்மிடமுள்ள வலிமையை அறியாதவராய், மனவெழுச்சி யினாலே துண்டப்பட்டுச் செயலைத் தொடங்கிவிட்டு, இடையிலே முரிந்துபோனவர்கள் உலகிற் பலராவர். 473

மற்றவரோடு பொருந்தி நடக்காதவனாகித் தன் வலிமை அளவை அறியாதவனும் ஆகி, தன்னை வல்லவன் என்று வியந்து நடப்பவன் விரைவிற் கெடுவான். 474 மென்மையான மயிலிறகை ஏற்றியுள்ள வண்டியும், அம் மயிலிறகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முரிந்து கெடும். 475

மரத்தின் நுனிக்கொம்பு வரையும் ஏறிவிட்ட வர்கள், அதனையும் கடந்து மேலே செல்வதற்கு முயன்றால் அது அவர்கள் உயிருக்கே இறுதியாகி விடும். 476 தன்னிடமுள்ள பொருளின் அளவைத் தெரிந்து, அதற்குத் தகுந்த அளவே கொடுத்து உதவுக, அது பொருளைப் போற்றி வழங்குவதற்குரிய நெறியாகும். 477 வருமானம் வருகின்ற வழியானது சிறிதாக இருந்தாலும், அது செலவாகிப் போகும் வழியானது விரியாதிருந்தால், அவனுக்குக் கேடில்லை. 478 தன்னுடைய செல்வத்தின் அளவை அறிந்து அதற்கு ஏற்றபடி வாழாதவனுடைய வாழ்க்கை உள்ளதுபோலத் தோன்றினாலும் இல்லாததாய்க் கெடும். 479 தன்னுடைய செல்வத்தின் அளவை ஆராயாது அளவு கடந்து உதவிவந்தால், அவன் செல்வத்தின் அளவும் விரைவில் கெட்டுப்போகும். 480