பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - அரசியல் 118

குடிகளை வருந்தச்செய்யும் செயல்களையே மேற்கொண்டு தீமை செய்து ஆட்சி நடத்துகிற வேந்தன், கொலையையே தொழிலாகக் கொண்டவரிலும் கொடியவனாவான். 551 அரசன் குடிகளிடம் முறைகடந்து பொருளைக் கேட்பது, கையிலே வேலோடு நிற்கும் கள்வன், எல்லாவற்றையும் தந்துவிடு என்று கேட்பதைப் போன்றதாகும். 552

நாட்டிலே நாள்தோறும் ஏற்படும் நிலைமையை ஆராய்ந்து தகுந்தபடி முறைசெய்யாத மன்னவன், நாளுக்கு நாள் தன் நாட்டையும் கெடுத்துவிடுவான். $53 மேல் நடப்பதைப்பற்றி கருதாமல், முறைதவறி அரசாளுகின்ற மன்னவன், தன் பொருள் வளத்தையும், நாட்டு மக்களது அன்பையும், ஒருங்கே இழந்து விடுவான். $54 கொடுங்கோல் ஆட்சியால் அல்லல்பட்ட மக்கள், அதைப் பொறுக்கமாட்டாது அழுத கண்ணிரே, ஒர் அரசனின் செல்வத்தை அழிக்கும் படை ஆகும். §§§ செங்கோன்மையால்தான் மன்னர்க்குப் புகழ் நிலைக்கிறது; அந்தச் செங்கோன்மை இல்லை என்றால், பிறவற்றால் வரும் புகழ் எல்லாம் நிலை பெறாது. 556 மழையில்லாத நிலைமை உலகத்துக்கு எத்தகைய துன்பம் தருமோ, அவ்வாறே அரசனின் அருளில்லாத தன்மை, அவன் நாட்டில் வாழ்பவருக்குத் துன்பம் தரும். 557 முறைப்படி ஆட்சி செய்யாத மன்னவனின் கொடுங்கோலின்கீழ் வாழ்ந்திருந்தால், ஏழ்மையைக் காட்டிலும், செல்வம் உடைமையே துன்பம் தரும். 558 ஆட்சிமுறை கோணி மன்னவன் ஆட்சி செய்தால், பருவ மழையானது தவறிப்போக, மேகமும் வேண்டுங்காலத்து மழை பொழியாது ஒதுங்கிப் போகும். $59 காவலன் முறையோடு நாட்டைக் காத்து வராவிட்டால், அந்நாட்டிலே பசுக்களும் பால்வளம் குன்றும் அறு தொழிலோரும் மறைநூல்களை மறப்பார்கள். 560