பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - அரசியல் 122

'கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகப் பெரிய அழகு இருப்பதனாலேதான், இவ்வுலகமும் அழிவு அடையாமல் நிலைப்பெற்றிருக்கிறது. 571 உலக நடைமுறை என்பது கண்ணோட்டத்தினால் நடந்து வருவதே ஆகவே, கண்ணோட்டம் இல்லாதவர்கள் இருப்பது உலகத்திற்கு வீண் சுமைதான். 572 பொருளோடு பாடல் பொருந்தவில்லை என்றால் அந்த இசையினால் பயன் இல்லை; அதுபோலவே, கண்ணோட்டத் தோடு அமையாத கண்களாலும் பயன் இல்லை. 573 தேவையான அளவுக்குக் கண்ணோட்டம் இல்லாத கண்ணானது, முகத்திலே இருப்பதுபோலத் தோன்றுவதைத் தவிர, உடையவனுக்கு என்ன நன்மையைத் தரும்? 574 கண்ணுக்கு அழகுதரும் ஆபரணம் கண்ணோட்டமே! அந்தக் கண்ணோட்டமாகிய ஆபரணம் இல்லையானால், அது புண் என்றே சான்றோரால் கருதப்படும். 575 கண்ணோடு பொருந்தியவராக இருந்தும், கண்ணோட்டம் ஆகிய செயலைச் செய்யாதவர்கள், மண்ணோடு பொருந்தியுள்ள மரத்தைப் போன்றவர்கள் ஆவர். 576 கண்ணோட்டம் இல்லாதவர்கள், கண்கள் இருந்தாலும் குருடர்களே கண்ணுடையவர்கள், கண்ணோட்டம் இல்லாமல் இருத்தல் என்பது பொருத்தமில்லை. 577 தொழிலிலே கெடுதல் ஏற்படாமல், எவரிடமும் கண்ணோட்டத் துடன் நடந்துகொள்ள வல்லவர்களுக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும். 578 தம்மை வருத்தும் தன்மை உடையவரிடத்திலும், கண்ணோட்டம் உடையவராக, அவரது குற்றத்தையும் பொறுத்து நடக்கும் பண்பே சிறந்ததாகும். 579 விரும்பத்தகுந்த கண்ணோட்டம்' என்னும் நாகரிகத்தை விரும்பும் சான்றோர்கள், பழகியவர் நஞ்சைப் பெய்வதைக் கண்டாலும், அதனை உண்டு அமைவார்கள். 580