பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - அரசியல் 132

துன்பங்கள் வரும்போது, மனம் தளராமல், நகைத்து ஒதுக்குக துன்பங்களைக் கடப்பதற்கு அதனைவிடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை. 62; வெள்ளமாகப் பெருகிவருகின்ற துன்பங்களும், அறிவு உடையவன் தன் உள்ளத்திலே நினைத்தபோது, அவனைவிட்டு மறைந்து போய்விடும். 622 இடையூறுகள் வந்தபோது அதற்காக வருந்தாத மனத்தெளிவு உள்ளவர்கள், துன்பத்துக்குத் துன்பம் உண்டாக்கி அதனைப் போக்கி விடுவார்கள். 623 தடைப்படும் இடங்களில் எல்லாம், தளர்ந்துவிடாமல் வண்டியை இழுத்துச் செல்லும் எருதைப்போன்ற ஊக்கம் உடையனுக்கு நேரிடும் துன்பங்களே துன்பம் அடையும். 624 மேன்மேலும் துன்பங்கள் வந்தாலும், நெஞ்சம் கலங்காதவனுக்கு நேர்ந்த துன்பமானது, தானே துன்பப்பட்டு அவனிடமிருந்து விலகிப் போகும். 625

பொருள் அடைந்தோம் என்று அதனைப் போற்றிக் காப்பதற்கு அறியாதவர்கள், வறுமைக் காலத்தில் பொருளை இழந்தோம் என்று துன்பம் அடைவாரோ? 626 இவ்வுடலானது துன்பங்களுக்கு இலக்கானது என்று அறிந்து, அதற்கு வரும் துன்பங்களுக்கு உள்ளம் கலங்காமல் இருப்பவர்களே மேலோர்கள். 627 இன்பம் உண்டாகியபோது அதனை விரும்பாதவனாக, துன்பம் வருதலும் இயல்பு என்று உணர்பவன், எந்தக் காலத்திலும் துன்பம் அடையமாட்டான். 628 இன்பமான காலத்திலும் இன்பத்தை நுகர விரும்பாதவன் எவனோ, அவன், துன்பமான காலத்திலும் எத்தகைய ஒரு துன்பமும் அடைய மாட்டான். 629 துன்பமே தனக்கு இன்பமானது என்று கருதித் தொழிலைச் செய்பவன், அவன் எதிரிகளும் அவன் முயற்சியை விரும்பும் சிறந்த நிலைமையை அடைவான். 630