பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 64. அமைச்சு

கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. 631

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. 632

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு 633

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு. 634

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லன்எஞ் ஞான்றும் திறனறிந்தான் தேர்ச்சித் துணை. 635

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை. 636

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல். 637

அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன். 638

பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும். 639

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர். 640