பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் - பாயிரம் 6

அகர ஒலியே எல்லா எழுத்துகளுக்கும் முதல் அதுபோல், ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்றான். ! தூய அறிவு வடிவான இறைவனின் நன்மை தரும் திருவடி களைத் தொழாதவர் என்றால், அவர் கற்றதனால் உண்டான பயன் யாதுமில்லை. 2 அன்பர் நெஞ்சமாகிய மலரின்மேல் சென்று வீற்றிருப்பவனது சிறந்த திருவடிகளைச் சேர்ந்தவர்களே, உலகில் நிலையாக வாழ்வார்கள். 3 விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை. 4 இறைவனின் மெய்ம்மையோடு சேர்ந்த புகழையே விரும்பினவரிடத்து, அறியாமை என்னும் இருளைச் சார்ந்த இருவகை வினைகளும் வந்து சேரா, 5 ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனின், பொய்ம்மை இல்லாத ஒழுக்கநெறியில் நின்றவரே நிலையான வாழ்வினர் ஆவர். 6. தனக்கு யாதொன்றும் ஒப்புமை இல்லாதவனின் திருவடிகளைச் சேர்ந்தார்க்கு அல்லாமல், பிறர்க்கு, மனக்கவலையை மாற்றுதல் அரிதாகும்.

அறக் கடலான அந்தணனின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல், பிறர்க்கு, இன்பமும் பொருளும் ஆகிய கடல்களைக் கடத்தல் இயலாது. 8 எண்வகைக் குணங்களில் உருவான இறைவன் திருவடிகளை வணங்காத தலை, கேளாக் காதும் காணாக் கண்ணும் போலப் பயனில்லாதது. 9 இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக் கடப்பார்கள் சேராதவர்களால் கடக்க இயலாது. 10