பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் - அங்கவியல் 158

ஒரு பொருளாக மதிப்பதற்குத் தகுதியில்லாதவரையும், பிறர் மதிக்கும்படியாகச் செய்யக்கூடிய பொருளை அல்லாமல் உலகவாழ்வுக்குச் சிறந்த பொருளாவது யாதும் இல்லை. 751 பொருள் இல்லாத வறியவரை எல்லாருமே இகழ்ச்சியாகப் பேசுவார்கள் செல்வம் உடையவரையோ எல்லாரும் சிறப்புச் செய்து போற்றுவார்கள். 752 பொருள் என்னும் நந்தாவிளக்கமானது, தன்னை உடையவர் எண்ணிய தேயங்களுக்கும் சென்று, அவர் பகையாகிய இருளைப் போக்கும் வல்லமை உடையதாகும். 753 தீய வழிகளால் அல்லாமல், பொருள் தேடும் திறனை அறிந்து தேடியதனால் வந்தடைந்த செல்வமானது, அறவாழ்க்கையையும், இன்பத்தையும் ஒருங்கே கொடுப்பது ஆகும். 754 அருள் என்னும் இயல்போடும், மக்களின் அன்போடும் பொருந்திவாராத பொருட் பெருக்கத்தைத் தீயவர் புரள்வதற்கு விலக்கி விட்டுவிட வேண்டும். 755 உடையவர் இல்லாததாலே வந்துசேர்ந்த செல்வமும், சுங்க வரியாக வந்த பொருளும், பகைவரை வென்று பெற்ற திறைப் பொருளும், வேந்தனின் உரிமைப் பொருளாகும். 756 'அன்பு என்னும் தாய் பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தையானது, பொருள் என்கின்ற செல்வம் படைத்த செவிலித்தாயால் வளர்க்கப்பட வேண்டும். 757 தன் கைப்பொருளோடு ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதானது, குன்றின்மேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டாற்போல், துன்பமின்றி இன்பம் தருவதாகும். 758 பகைவரின் மனச் செருக்கை அழித்து வெற்றிபெரும் ஆயுதம் பொருளைக் காட்டிலும் கூர்மையானது வேறில்லை ஆதலால், பொருளை எப்போதும் தேடிக்கொள்ள வேண்டும். 7.59 சிறந்த வழியோடு வந்த பொருளை மிகுதியாகத் தேடிக் கொண்டவர்களுக்கு எண்ணப்படும் மற்றையவாகிய அறமும் இன்பமும் ஒருங்கே வந்துவாய்க்கும் பொருள்களாகும். 760