பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 80. நட்பாராய்தல்

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு. 797

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும். 792

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு. 793

குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. 794

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நட்பு ஆய்ந்து கொளல். 79S

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல். 796

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல். 797

உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. /98

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும். 799

மருவுக மாசற்றார் கேண்மை ஒன்றித்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு. 800