பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 84. பேதைமை

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல். 83/

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கண் செயல். 832

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில் 833

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான்அடங்காப் பேதையிற் பேதையார் இல், 834

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு. 835

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின், 836

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை 837

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின். 838

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன்று இல் 839

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல், 840