பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - அங்கவியல் 176

அறிவில்லாத தன்மையே, வறுமையுள் கொடிய வறுமை; பிற, பொருள் இல்லாத வறுமையை உலகம் நிலையான வறுமையாக ஒருபோதும் கருதாது. 84] அறிவில்லாத ஒருவன், மனமகிழ்ச்சியோடு ஒரு பொருளை ஒருவனுக்குத் தருவதென்பது, பெறுவானது தவத்தின் பயனே அல்லாமல், வேறு எதனாலும் இல்லை. 842

அறிவில்லாதவர், தமக்குத்தாமே செய்துகொள்ளும் வருத்தம் தரக்கூடிய துன்பங்கள், அவரது பகைவராலும் அவருக்குச் செய்யமுடியாதவையாக இருக்கும். 843 அறியாமை என்று சொல்லப்படுவது யாது? என்றால், அஃது, அறிவில்லாதவனும், தான் அறிவுடையவன்' என்று நினைத்துச் செருக்கு அடைதலாகும்! 844 தான் கல்லாத ஒரு செயலையும், அறிவில்லாததால் துணிந்து செய்யத் தொடங்குதல், எதையும் குறையில்லாமல் செய்யவல்ல செயல்களிலும், ஐயத்தைத் தரும். 845 தம்மிடத்திலே உள்ள குற்றங்கள் மறையாதபோது, உடல் முழுவதும் ஆடைகளாலே மறைத்துக்கொண்டு, நல்லவர் போலத் திரிதல், அறிவற்ற தன்மை ஆகும். 846 அரியவான மறைகளைக் கற்றும், உண்மைப்பொருளை அறியாமல் சோர்வு அடைகின்ற அறிவில்லாதவன், தனக்குத்தானே பெரிய தீமைகளைச் செய்து கொள்வான். 847 அறிவுடையோர் இன்னின்னபடி செய்க என்று ஏவிய போதும், அதன்படி செய்யமாட்டாதவன், தானும் தெளியாதவன், உயிர் போகுமளவும் துன்பம் அடைவான். 848 தன் அறியாமையால், தான் கண்டபடியே பிறருக்குக் காட்டுபவன், தானும் உண்மை காணாதவன், என்றுமே தான் கண்டபடி காண்பவனாகவே விளங்குவான். 849 உலகத்தார் உண்டு என்னும் ஒரு பொருளை, தன்னுடைய அறியாமையாலே இல்லை என்று சொல்லுபவன், உலகத்தாரால் பேயாகக் கருதி ஒதுக்கிவைக்கப் படுவான். 850