பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - அங்கவியல் 184

நிழலும் நீரும் நுகரும் காலத்தில் இன்பமானாலும், பின்னர் நோய் செய்யும் தழுவவேண்டும் சுற்றத்தாரின் இயல்புகளும் முதலில் இனியவாயினும், பின்னர் இன்னாதனவாகும். 881 வாளைப்போல வெளிப்பட்டு நிற்கும் பகைவர்க்கு அஞ்சவேண்டாம்; சுற்றத்தார்போல அன்புகாட்டி உள்ளத்தில் பகைமறைத்து நிற்பவருக்கே, அஞ்ச வேண்டும். 882 உட்பகையாக விளங்குபவருக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்; அங்ங்னம் காவாதிருப்பின், தனக்குத் தளர்ச்சி வந்தபோது, அவர்கள் கெடுதல் செய்வார்கள். 883 உள்ளத்தில் திருந்தாத உட்பகை தோன்றினால், அரசன் அதனை அப்போதே ஒழிக்க வேண்டும் இல்லையானால், அஃது சுற்றம் வசமாகாதபடி குற்றங்களைத் தந்து விடும். 884 புறத்தே உறவுமுறைத் தன்மையோடு பழகுவாரிடம் உட்பகை தோன்றினால், அஃது, அவனுக்கு இறத்தல் முறைமையோடு கூடிய பல குற்றங்களையும் தரும். 885 தனக்கு உட்பட்டவர் இடத்திலேயே பகைமை தோன்றினால், தனக்குச் சாவாதிருப்பது கைகூடுவது என்பதும் எக்காலத்திலும் அரியதாகும். 886 செப்பின் புணர்ச்சிபோல வெளிப்பார்வைக்குப் பொருந்தினவர் ஆயினும், உட்பகை உண்டாகிய குடியிலுள்ளவர்கள் தம் உள்ளத்தினாலே ஒன்றுகூட மாட்டார்கள். 887 முன் உயர்ந்து வளர்ந்ததே என்றாலும், உட்பகையுள்ள குடியானது, அரத்தினால் அராவப்பட்ட இரும்பைப்போல் நாளுக்குநாள் தேய்ந்து அழிந்து போகும். 888 ஒருவனது உட்பகை, அவன் பெருமையை நோக்க, எள்ளின் பிளவுபோன்று சிறிதானது என்றாலும், அதனாலும், அவன் பெருமை எல்லாம் பின்காலத்தில் கெட்டுவிடும். 889 மனம் பொருந்தாதவரோடு கூடியிருந்து வா ம்ை வாழ்க்கை ஒரு குடிசையுள்ளே பாம்போடுகூடத் தங்கியிருந், வருந்துவதைப் போன்றதாகும். 890