பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - அங்கவியல் 190

அன்பால் விரும்பாமல், அவன்தரும் பொருளையே விரும்பும் மகளிரது, அவனையே அன்பால் விரும்பியதுபோலப் பேசும் பேச்சும், அவனுக்குப் பின்னர்த் துன்பம் தரும். 971 ஒருவனிடமுள்ள பொருளின் அளவை அறிந்து, அதனை அடையும்வரை பண்பைப்பற்றிப் பேசும் பண்பில்லாத மகளிரது நடத்தையை, ஆராய்ந்து விட்டுவிடுக 912 கொடுக்கும் பொருளையே விரும்பும் பொதுமகளிரது பொய்யான முயக்கமானது, பிணம் எடுப்பவர் இருட்டறையில் முன் அறியாத பிணத்தைத் தழுவியது போலாகும். 913 இன்பமாகிய பொருளை இகழ்ந்து, பொருளையே விரும்பும் பொதுமகளிரது இழிந்த இன்பத்தை, அருளோடுகூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவாளர் விரும்பார். 914 இயற்கையான மதிநலத்தால் மாட்சிமைப்பட்ட அறிவினை உடையவர்கள், பொருள் தருவார்க்கெல்லாம் பொதுவான ஆசைகாட்டும் மகளிரது இழிவான நலத்தைத் தீண்டார். 915 தம் அழகால் செருக்கடைந்து, தம் புன்மையான நலத்தை விலை தருவாரிடம் எல்லாம் பரப்பும் பொதுமகளிர் தோளினை, தம் புகழை நினைக்கும் உயர்ந்தோர் தீண்டமாட்டார். 916 நெஞ்சிலே பொருள்மேல் ஆசைகொண்டு, அதைப் பெறக் கருதிப் பொருள் தருபவரோடு உடலால் கூடியிருக்கும் மகளிரது தோள்களை, நெஞ்சமில்லாதவர்களே சேர்வர். 917 வஞ்சித்தலில் வல்ல மகளிரது முயக்கத்தை, அவ் வஞ்சனையை ஆராய்ந்து அறியும் அறிவுடையவர் அல்லாத பிறருக்கு, 'அணங்குத் தாக்கு என்று சொல்வார்கள். 918 உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் எவரையும், விலை தந்தால் தழுவுகிற மகளிரது மெல்லிய தோள்கள், அறிவில்லாத கீழ்மக்கள் புகுந்து அழுந்தும் நரகம் ஆகும். 919 எப்போதும் கவர்த்த மனத்தையுடைய மகளிரும், கள்ளும், சூதும், என்னும் மூன்று தொடர்புகளும், திருமகளால் கைவிடப்பட்டவருக்கு நெருங்கிய நட்பு ஆகும். 920