பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - அங்கவியல் 194

தான் வெல்பவன் ஆனாலும் சூதாடலை விரும்ப வேண்டாம். அவ் வெற்றியால் வரும் பொருளும், தூண்டில் இரும்பினை இரையென்று நினைத்து மீன் விழுங்கினாற் போன்றதே. 931 பெறுவோம் என்னும் ஆசையால் நூற்றுக்கணக்காக இழந்து வறியவராகும் சூதருக்கும், பொருளால் நன்மைகளை அடைந்து வாழ்கின்ற நெறியும் ஒன்று உளதாகுமோ? 932

உருளும் கவற்றின்மீது கட்டப்படும் பந்தயப் பொருளை இடைவிடாது சொல்லிச் சூதாடுமாயின், ஈட்டிய பொருளும், வருவாயும் எல்லாம் எதிரிகளிடம்போய்ச் சேர்ந்துவிடும். 933 தன்னை விரும்பியவருக்குப் பலவகைத்துன்பங்களையும் செய்து அவரிடமுள்ள புகழையும் கெடுக்கும் சூதைப்போல், வறுமையைத் தரக்கூடியது வேறு எதுவும் இல்லை. 934 முன்காலத்திலே செல்வம் உடையவராயிருந்தும், தற்போது இல்லாதவரானவர்கள், கவற்றினையும், அஃதாடும் களத் தினையும், கைத்திறனையும், மேற்கொண்டு விடாதவரே. 935 குதென்னும் முகடியினாலே விழுங்கப்பட்டவர்கள், இம்மையிலே வயிறார உணவைப் பெறுவதுடன், மறுமையில் நரகத் துன்பத்திலும் சிக்கி வருந்துவார்கள். 936

நல்லது செய்வதற்கு என்னும் காலமானது சூதாடு களத்தில் கழியுமானால், அது, தொன்று தொட்டு வந்த அவன் செல்வத்தையும் நல்ல பண்புகளையும் கெடுத்துவிடும். 937 பொருளையும் கெடுத்து, பொய்யை மேற்கொள்ளச் செய்து, அருளையும் கெடுத்து, சூதானது, ஒருவனை இருமையும் துன்பத்திலே ஆழ்த்தி விடும். 938 சூதாடலை வேடிக்கை என்று கருதிச் செய்வானானாலும், ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்னும் இவை ஐந்துமே, அவனை அடையாமற் போய்விடும். 939 இழக்கும் போதெல்லாம், மேன்மேலும் விருப்பங்கொள்ளுகின்ற சூதனைப்போல், உடம்பும் துன்பத்தால் வருந்தவருந்த மேன்மேலும் அதனை விரும்பும். 940