பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் - பாயிரம் 12

அறமானது சிறப்பைத் தரும் செல்வத்தையும் தரும் அதனால் அறத்தைவிட உயிருக்கு ஆக்கம் தருவது வேறு யாதுமில்லை. 31

அறநெறியோடு வாழ்வதைக் காட்டிலும் உயிருக்கு நன்மை யானதும் இல்லை; அறநெறியைப் போற்றாமல் மறத்தலைக் காட்டிலும் கேடானதும் இல்லை. 32

நம்மாலே முடிந்த வகைகளில் எல்லாம், முடியக்கூடிய வழிகளில் எல்லாம், அறச் செயல்களை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும். 33 தன் மனத்திடத்துக் குற்றம் இல்லாதவனாகுதல் என்னும் அவ்வளவே அறம் எனப்படும் பிற ஆரவாரத் தன்மை கொண்டவை. 34

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்னும் நான்கிற்கும் ஒருசிறிதும் இடம் தராமல் ஒழுகிவருவதே அறம் ஆகும். 35

பின்காலத்தில் பார்ப்போம் என்று தள்ளி வைக்காமல், அறத்தை அன்றே செய்க, அது இறக்கும் காலத்திலே அழியாத் துணையாகும். 36 சிவிகையைச் (பல்லக்கு கமப்பவனோடு, அதனில் அமர்ந்து செல்பவன் ஆகியவரிடையே, 'அறத்தின் வழி இதுதான் என்று கூறவேண்டாம். 37 செய்யத் தவறிய நாள் என்றில்லாமல் ஒருவன் அறம் செய்வானானால், அதுவே வாழ்நாள் முடியும் வழியை அடைக்கும் கல்லாகும். 38

அற வாழ்வில் வாழ்வதனால் வருவதே இன்பமாகும் மற்றைப் பொருளும் இன்பமும் இன்பமாகா அவற்றால் புகழும் இல்லை. - 39 ஒருவன் தன் வாழ்நாளில் செய்யவேண்டியது எல்லாம் அறமே அவன் செய்யாமல் காக்க வேண்டியது எல்லாம் பழிச்செயலே. 4()