பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - ஒழிபியல் 214

உழவின் வருத்தத்தைக் கண்டு, பிற தொழில்களைச் செய்து திரிந்தாலும், முடிவில் ஏருடையவரையே உலகம் உணவுக்கு எதிர்பார்த்தலால், உழவே மிகவும் சிறந்தது. 103} உழவைவிட்டுப் பிற தொழில்களைச் செய்வாருக்கும் உணவுப் பொருள்களைத் தந்து தாங்குவதனால், உழுதொழில் செய்வாரே உலகத்தாருக்கு அச்சாணி ஆவார். 1032 யாவரும் உண்ணுவதற்கு உணவைத் தத்து, தாமும் உண்டு வாழ்பவரே உரிமை வாழ்வினர் மற்றையவர் பிறரைத் தொழுது உண்டு, அவர்பின் செல்கின்றவரே யாவர். #033

உழுதலால் நெல்லுடையவரான கருணையாளர், பலவேந்தர் குடைநிழலது ஆகிய உலகம் முழுவதையும், தம் அரசனின் கு ைக்கீழ் வந்துசேரக் காணும் சக்தியுடையவர் ஆவர். 1034 உழவான முயற்சியைச் செய்து உண்பதனையே இயல்பாக உடையவர், பிறரைத் தாம் இரவார். தம்பால் வந்து இரப்பவர்க்கும் அவர் வேண்டியதைத் தருவார்கள். 1035 உழவர்களின் கை உழாது மடங்கிவிடுமானால், யாவரும் விரும்பும் உணவையும் கைவிட்டோம் என்று துறந்தவர்க்கும், அவ்வறத்தில் நிலைத்து நிற்க முடியாது. 1036 ஒரு பலப் புழுதியானது காற்பலமாக ஆகும்படி உழுது காயவிடுவானானால், அதனிடம் செய்த பயிர், ஒரு பிடி எருவு இடுதலையும் வேண்டாமலே நன்றாக விளையும். iO37

பலகால் உழுதலினும், எருப்பெய்து வளப்படுத்துதல் சிறந்தது; இவ்விரண்டும் செய்து களையும் எடுத்தபின், பயிரைக் காத்தல், நீர் பாய்ச்சுவதிலும் நல்லதாகும். l{}38 நிலத்துக்கு உரியவன் நாள்தோறும் சென்று பார்த்து, வேண்டியவை செய்யாது சோம்பினால், அந்த நிலமும், அவன் மனைவியைப் போல, அவனோடு பிணங்கி விடும். 1039 ‘யாம் வறியோம்' என்று சொல்லிச் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் என்று உயர்த்திப் பேசப்படும் நல்லாள் தன்னுள்ளே சிரித்துத் கொள்வாள். 煎}望0