பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

காமத்துப்பால் - களவியல்

இவ் வடிவம் தேவமகளோ? சிறந்த அழகு மயிலோ அல்லது, கனவிய குழையையுடைய ஒரு மானுடப் பெண்தானோ! புரியாமல் என் நெஞ்சம் மயங்குகின்றதே! 1081 என்னை அவள் நோக்கினாள். என் பார்வைக்கு எதிராகவும் பார்த்தாள் அந்தப் பார்வை, தானே தாக்கி வருத்தும் அணங்கு, தானையையும் கொண்டதுபோல் உள்ளதே, 1082 'கூற்று' என்பதனை இதன் முன்னர் அறியேன், இப்போது அறிந்துவிட்டேன்; அது, அழகிய பெண்ணின் வடிவோடு பெரியவாய் அமர்த்த கண்களையும் உடையது. 1083 தன்னைக் கண்டவரின் உயிரை உண்ணுகின்ற தோற்றத்தோடு, பெண்களில் சிறந்தவளான இந்தப் பேதைக்குக் கண்களும் அமர்த்தனவாக அமைந்து உள்ளனவே! j084 இளமைப் பருவத்தவளான இவளது பார்வை, வருத்தும் கூற்றமோ பிறழும் கண்ணோ: மருளும் பிணையோ! இம்மூன்று தன்மையையும் தன்பால் கொண்டிருக்கிறதே! 1085 விளைவான இவள் புருவங்கள் செம்மையாயிருந்து விலக்கினவானால், அவற்றைக் கடந்து, இவள் கண்களும் நாம் நடுங்கும் துயரைச் செய்ய மாட்டாவே! 1086 இந்த மாதின், சாயாத முலைகளின் மேலாக இடப்பட்டுள்ள துகில், அவையும் என்னைக் கொல்லாதபடி காத்தலால், மதகளிற்றின் முகபடாத்தைப் போன்றதாகும். 1087 போர்க்களத்துக்கு வராதவரும், பிறருக்கு நேர்ந்ததைக் கேட்டு அஞ்சுவதற்கு ஏதுவான என் வலிமையெல்லாம், இவளின் ஒளிவீசும் நெற்றிக்கே உடைந்துபோயிற்றே! J088 மானின் பிணைபோன்ற மடநோக்கினையும், உள்ளத்தே நானத்தையும் உடையவளான இவளுக்கு, இவையே சிறந்த அழகாக, வேறும் அணிபூட்டி அழகுபடுத்தல் ஏனோ? 1089 தன்னை உண்டவருக்கு மகிழ்ச்சியைச் செய்வதல்லாமல், அடப்பட்ட நறவானது, காமத்தைப்போலக் கண்டவருக்கு மகிழ்வைச் செய்யும் ஆற்றலுடையது இல்லையே! 1090