பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால் - களவியல் 228

இவள் மையுண்ணும் கண்களில் இருவகைப் பார்வைகள் உள்ளன; ஒன்று என்னிடத்து நோய்செய்யும் பார்வை; மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும் பார்வை. 1091 என்னை அறியாமல் என்மேல் நோக்குகின்ற இவள் அருகிய நோக்கமானது, காம உறவிலே சரிபாகம் ஆவதன்று அதனிலும் மிகுதியானது ஆகும். 1092 அன்போடு என்னை நோக்கினாள்; பின் எதனையோ நினைத்தாள்போல நாணித் தலைகவிழ்ந்தாள்; அக்குறிப்பு, எங்களின் அன்புப்பயிருக்கு வார்த்த நீராயிற்று. 1093 யான் தன்னைப் பாராதபோது என்னை நோக்கி அவள் மெல்ல நகுவாள் யான் பார்க்கும்பொழுதே எனக்கு எதிராகப் பாராள்: தலைகவிழ்ந்து நிலத்தையே பார்ப்.ாள்! 1094 என்னையே குறிப்பாக கொண்டு பார்த்தல் அல்லாமலும், தான் ஒரு கண்ணை, ஒரு பக்கமாகச் சாய்த்தாள் போலவும் நோக்கி, தன்னுள்ளாகவே அவள் நகுவாள்! 1095 புறத்தே நம்மை விரும்பாதவரைப்போலச் சொன்னாரானாலும், தம் உள்ளத்தில் நம்மைச் சினவாதவரின் சொற்கள் பயனாகுதல், விரைவில் உணரப்படும். 1096 நம்மை உள்ளத்திலே சினவாதவரின் சொல்லும், சினந்தார் போலப் பார்க்கும் பார்வையும், அயலார்போல் உள்ளத்திலுள்ள ஒரு குறிப்பாலே வருவன. 1097

அவளை இரப்பதுபோல யான் பார்த்தபோது, அதனால் நெகிழ்ந்தவளாய் மெல்ல நகைத்தாள்; அதனால் அசையும் இயல்பு உடையவளுக்கு நன்மைக் குறிப்பும் உண்டு. 1098 முன் அறியாதவரைப் போலத் தம்முள் பொதுநோக்காகவே ஒருவரையொருவர் பார்த்தலும், தம் உள்ளத்திலே காதல் உடையவரிடம் காணப்படும் தன்மை ஆகும். 1999 காமத்திற்கு உரிய இருவருள் ஒருவர் கண்ணோடு மற்றவர் கண்ணும் தம் நோக்கத்தால் ஒத்ததானால், அவர் வாய்ச் சொற்களால் எந்தப் பயனுமில்லை. 1100