பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால் - களவியல் 230

கண்டும் கேட்டும் உண்டும் மோந்தும் தீண்டியும் அறிகின்ற ஐம்புல இன்பங்களும், ஒளிவீசும் வளையல் அணிந்த இவள் ஒருத்தியிடத்திலேயே அமைந்துள்ளனவே! 110] நோய்க்கு மருந்தாக அமைவன வேறான பொருள்கள். அவ்வாறு இல்லாமல், அணிபுனைந்த இவளால் நமக்கு வந்த நோய்க்கு, இவள், தானே மருந்தும் ஆயினளே! 1102 தாம் விரும்பும் மகளிரின் மென்மையான தோள்மேல் துயிலும் இன்பத்தைப் போலத் தாமரைக் கண்ணானின் போகஉலகத்து இன்பமும் இனிதாக இருக்குமோ? 1103 தன்னைவிட்டு விலகிச் சென்றால் சுடுதலும், அருகில் நெருங்கினால் குளிர்தலுமாகிய நெருப்பை, இவள்தான், எவ்விடத்திலிருந்து பெற்றுள்ளாளோ? #()4

விரும்பியபொழுது அவையவை தரும் இன்பத்தைப்போல இன்பம் தருவன மலரணிந்த கூந்தலை உடையவளான இவள் தோள்கள் தருகின்ற இன்பம்! HOS அணைக்கும் போதெல்லாம், வாடிய என்னுயிர் தளிர்க்குமாறு தீண்டுதலால், இப் பேதையின் தோள்கள் அமிழ்தத்தால் அமைந்தவை போலும்! Höö

தம் வீட்டிலிருந்து, தமக்குள்ள பகுதியை உண்ணும் இனிமை போன்றது, அழகிய மாமை நிறம் உடையவளான இவளைத் தழுவிப் பெறுகின்ற இன்பம்! 1107

காற்றும் இடையிலே புகுந்து பிளந்துவிடாத இறுக்கமான தழுவுதல், விரும்பிக் கூடும் இருவருக்கும் இனிமைதரும் நல்ல இன்ப உறவாகும்! j/08 ஊடலும், அதனை அளவோடு அறிந்து தெளிவித்தலும் பின்னர்க் கூடுதலும், என்னும் இவை எல்லாம், காமம் பொருந்தியவர் தமக்குள் பெற்ற பயன்களாகும். #09 ஒன்றை அறியும்போது, முன்னிருந்த அறியாமையைச் கண்டாற்போல, செறிவான சிவந்த அணிகளை உடையவளைக் சேருந்தோறும், காமஇன்பமும் உண்டாகின்றது: #10