பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால் - களவியல் 238

ஊரிலே பழிச்சொல் எழுந்தும் என் உயிர் இன்னும் போகாது நிற்கின்றது. அஃது என் நல்வினையின் பயனால்தான் என்பதைப் பலரும் அறிய மாட்டார்கள். |14} குவளை மலரைப்போன்ற கண்களை உடையவளான இவளின் அருமையைப் பற்றி அறியாமல், இவளை எளியவளாகக் கருதி, இவ்வூரவர் அலரினைத் தந்தார்களே! 1142 ஊர் அனைத்தும் அறிந்த இப் பழிச்சொற்கள் அவனையும் சென்று சேராதோ! சேருமாதலால், அதனைப் பெறாதைப் பெற்றாற் போன்றதாகவே யானும் கொள்வேன். 1143 ஊரார் உரைக்கும் பழிச்சொற்களாலே காமநோயும் நன்றாக மலர்கின்றது! அதுவும் இல்லையானால், என் ஆசையும் தன் மலர்ச்சியில்லாமல் சுருங்கிப் போய்விடுமே! 1144 களிக்குந்தோறும் களிக்குந்தோறும் மேன்மேலும் கள்ளுண்டலை விரும்பினாற்போல, காமமும், அலரால் வெளிப்பட வெளிப்பட, மேலும் இனிமையாகின்றது. 1145 அவரைக் கண்டது எல்லாம் ஒரே ஒரு நாள்தான்; திங்களைப் பாம்பு கொண்டது எங்கும் பரவினாற்போல, ஊரலரும் அதற்குள் எங்கும் வெளிப்பட்டுப் பரவிவிட்டதே. 1746 இக் காமநோயானது, ஊரவர் சொல்லும் பழிச்சொற்களை எருவாகவும், அதுகேட்டு அன்னை சொல்லும் கடுஞ்சொல்லை நீராகவும் கொண்டு வளர்கின்றது. 1j47 "பழிச்சொல்லால் காமத்தைத் தணித்துவிடுவோம்' என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்பது போன்ற அறியாமைச் செயலாகும். #48 'அஞ்சாதே பிரியேன் என்று என்னைத் தெளிவித்துக் கூடியவர், இந்நாள் பலரும் நாண நம்மைக் கைவிட்டுப் போனபோது, அலருக்கு நாணவும் நம்மால் இயலுமோ! 1149 யாம் விரும்புகின்ற அலரினை இவ்வூரவரும் எடுத்துக் கூறுகின்றனர். அதனால், எம் காதலரும் தாம் எம் உறவை விரும்பி வந்து எமக்கு அருளினைச் செய்வார். 1150