பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால் - கற்பியல் 246

என்னை விரும்பிய காதலரின் பிரிவுக்கு அந்நாளிலே உடன்பட்ட யான், இப்பொழுது பசந்த என் இயல்பை யாருக்குச் சென்று எடுத்துச் சொல்வேன்! 118? அவர் தந்தார் என்னும் உரிமையினாலே, இப் பசப்புத் தானும், என் உடலின்மேல் உரிமையோடு பற்றிப் படர்ந்து மேனி எங்கும் நிறைகின்றதே! il&2 என் அழகையும் நாணத்தையும் அவர் தம்மோடு எடுத்துக் கொண்டார்; அதற்குக் கைம்மாறாகக் காமநோயையும் பசலையையும் எனக்குத் தந்துள்ளார்! #183

அவரையே யான் நினைத்திருப்பேன்; அவர் திறங்களைப் பற்றியே பேசுவேன்; அவ்வாறாகவும், பசலையும் வந்து படர்ந்ததுதான் பெரிய வஞ்சனையாய் இருக்கின்றது: jí84

அதோ பார், என் காதலர் என்னைப் பிரிந்து போகின்றார்; இதோ பார், அதற்குள்ளேயே என் உடலில் பசலையானது வந்து பற்றிப் படருகின்றது! 1185

விளக்கின் முடிவை எதிர்பார்த்துத் தான்வரக் காத்திருக்கும் இருளைப்போல, என் தலைவனுடைய தழுவலின் முடிவைப் பசலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. 1786

தலைவனைத் தழுவியபடியே கிடந்தேன்; பக்கத்தில் சிறிது புரண்டேன்; அந்தப் பிரிவுக்கே பசலையும் அள்ளிக்கொள்வது போல, என்மீது மிகுதியாகப் பரவி விட்டதே. 1187

'இவள் பசந்தாள்' என்று என்னைப் பழித்துப் பேசுவது அல்லாமல், இவளைக் காதலர் கைவிட்டுப் பிரிந்தார் என்று பேசுபவர் யாரும் இல்லையே! 1188

பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையினர் ஆவார் என்றால், என்னுடைய மேனியும் உள்ளபடியே பசலை நோயினை அடைவதாக! 1189

'பிரிவுக்கு உடன்படச் செய்து பிரிந்துபோனவர், நமக்கு அருள் செய்யாதது பற்றித் தூற்றார் என்றால், யான் பசந்தேன் என்று பேர்பெறுவதும் நல்லதேயாகும்! 11.90