பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால் - கற்பியல் 252

பிரிவால் வருந்திய நான் அயர்ந்து கண் உறங்கியபோது, காதலர் அனுப்பிய துதோடும் வந்த கனவுக்கு, யான் விருந்தாக என்ன கைம்மாறு செய்யப் போகின்றேன்! 1211 யான் விரும்பும்போது என் கண்கள் தூங்குமானால், கனவில் வந்து தோன்றும் காதலருக்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும் உண்மையைச் சொல்வேன்! 1212

நனவிலே வந்து நமக்கு அன்பு செய்யாதிருக்கின்ற காதலரை, கனவிலாவது கண்டு மகிழ்வதனால்தான், என் உயிரும் இன்னமும் போகாமல் இருக்கின்றது. 1213 நனவில் வந்து அன்புசெய்யாத காதலரைத் தேடிக்கொண்டு வருவதற்காகவே, அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் கனவில் வந்து நமக்குத் தோன்றுகின்றன. 1214 முன்பு நனவில் கண்ட இன்பமும் அந்தப் பொழுதளவிலே இனிதாயிருந்தது; இப்பொழுது காணும் கனவும், கானும் அந்தப்பொழுதிலே நமக்கு இனிதாகவே யுள்ளது. 1215 நனவு என்று சொல்லப்படும் ஒன்று இல்லையானால், கனவில் வருகின்ற நம் காதலர் நம்மைவிட்டு எப்போதுமே பிரியாதிருப்பார் அல்லவோ! 1216

நனவில் வந்து நமக்கு அன்புசெய்வதற்கு நினையாத கொடுமையாளரான காதலர், கனவிலே வந்துமட்டும் நம்மை வருத்துவதுதான் எதனாலோ? 1217 துங்கும்போது கனவிலே என் தோள்மேலராகக் காதலர் வந்திருப்பார் விழித்து எழும்போதோ, விரைவாக என் நெஞ்சில் உள்ளவராக ஆகின்றார்! 1278 கனவிலே காதலரை வரக்காணாத மகளிரே, நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் குறித்து வருத்தப்பட்டு, மனம் நொந்து கொள்வார்கள். 1219 நனவிலே நம்மைவிட்டுப் பிரிந்துபோனார் என்று அவரைப் பற்றி இவ்வூரார் பழித்துப் பேசுகின்றார்களே! இவர்கள் எம்போல் கனவில் தம் காதலரைக் காண்பதில்லையோ? 1220