பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253 122. கனவுநிலை உரைத்தல்

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய்வேன்கொல் விருந்து. 1211

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன். 1212

நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்ட லின் உண்டென் உயிர். 1213

கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு. 1214

நனவினால் கண்டது.உம் ஆங்கே கனவுந்தான்

கண்ட பொழுதே இனிது. 1215

நனவென ஒன்றில்லை யாயின் கனவினால் காதலர் நீங்கலர் மன். |216

நனவினால் நல்காக் கொடியார் கனவினான் என்னெம்மைப் பிழிப் பது. 1217

துஞ்சுங்கால் தோள்மேலராகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. 1218

நனவினால் நல்காரை நோவர் கனவினாற்

காதலர்க் கானா தவர். 1219

நனவினால் நந்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர். 1220