பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால் - கற்பியல் 262

அவர் வருவாரென வழியையே பார்த்துக் கண்களின் ஒளியும் கெட்டன; அவர் பிரிந்த நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டு விரல்களும் தேய்ந்து போயின. #261

தோழி! அவரைப் பிரிந்து வருந்திருக்கும் இன்றைக்கும், அவரை மறந்தால், என் தோள்கள் அழகுகெட்டு மெலியும் என் தோள் அணிகளும் கழலும்படி நேர்ந்துவிடும். 1262

வெற்றியை விரும்பி, ஊக்கமே துணையாக, வேற்று நாட்டிற்குச் சென்றுள்ள காதலர் திரும்பி வருதலைக் காண்பதற்கு விரும்பியே, இன்னும் உயிரோடுள்ளேன். 1253 முன்னர்க் கூடியிருந்த காம இன்பத்தையும் மறந்து, பிரிந்து போனவரின் வரவை நினைத்து, என் நெஞ்சம் மரக்கிளை தோறும் ஏறி ஏறிப் பார்க்கின்றதே! #264

என் காதலனைக் கண்ணாரக் காண்பேனாக, அவ்வாறு கண்டபின் என் மெல்லிய தோள்களில் உண்டாகியுள்ள பசலைநோயும் தானாகவே நீங்கிப் போய்விடும். 1265 என் காதலன் ஒரு நாள்மட்டும் என்னிடம் வருவானாக வந்தால், என் துன்ப நோய் எல்லாம் தீரும்படியாக, அவனோடு, இன்பத்தை நானும் பருகுவேன். 1266 என் கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது தழுவிக்கொள்வேனோ? அல்லது ஆவலோடு கலந்து இன்புறுவேனோ? என்ன செய்வேன்? 1267 வேந்தன் இவ் வினையிலே தானும் கலந்து வெற்றி அடை வானாக யானும், என் மனைக்கண் சென்றுசேர்ந்து, மாலைப் பொழுதில், அவளோடு விருந்தை அநுபவிப்பேன். 1268 தொலைவிடத்துக்குப் பிரிந்துசென்ற காதலர் வரும் நாளை மனத்தில் வைத்து ஏங்கும் மகளிருக்கு, ஒருநாள் தானும் ஏழுநாள்போல் நெடியதாகக் கழியும் 1269 பிரிவுத் துயரம் தாங்காமல் உள்ளம் உடைந்து அழிந்து போய்விட்டால், அவரைப் பெறுவதனால் என்ன? பெற்றால் தான் என்ன? அவரோடு பொருந்தினால்தான் என்ன? 1270