பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால் - கற்பியல் 264

நீதான் மறைந்தாலும், நின் மறைப்பையும் கடந்து, நின் கண்கள் எனக்குச் சொல்ல முற்படுகின்ற ஒரு செய்தியும் நின்னிடத்தில் உள்ளதாகும். 1277 கண் நிறைந்த பேரழகும், மூங்கில்போலும் அழகிய தோள்களும் கொண்ட என் காதலிக்கு, பெண்மை நிறைந்த தன்மையோ பெரிதாக உள்ளது. 1272

நூலில் கோத்த மணியினுள்ளே காணப்படும் நூலைப்போல, என் காதலியின் அழகினுள்ளேயும் அமைந்து, புறத்தே விளங்குகின்ற குறிப்பும் ஒன்று இருக்கின்றது. 1273 அரும்பினுள்ளே அடங்கியிருக்கின்ற மணத்தைப்போல, என் காதலியின் புன்முறுவலின் உள்ளே அடங்கியிருக்கும் உள்ளத்தின் குறிப்பும் ஒன்று உள்ளது. 1274 செறிந்த தொடியுடையவளான என் காதலி செய்துவிட்டுப் போன கள்ளமான குறிப்பானது, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் ஒரு மருந்தையும் உடையதாய் இருந்தது. 1275 பெரிதாக அன்பைச் செய்து, விருப்பம் மிகுதியாகுமாறு கலத்தல், அரிதான பிரிவைச் செய்து, அன்பில்லாமல் விட்டுப் பிரியும் உட் கருத்தையும் உ ையதாகும். 1276

குளிர்ந்த நீர்த் துறைக்கு உரியவனாகிய நம் காதலன் நம்மைப் பிரிந்ததனை, நம்மைக் காட்டிலும், நம் கைவளையல்கள் முன்னதாகவே உணர்ந்து, தாமும் கழன்றனவே! 1277 நேற்றுத்தான் எம் காதலர் எம்மைப் பிரிந்து சென்றனர். யாமும், அவரைப் பிரிந்து ஏழுநாட்கள் ஆகியவரைப்போல மேனி பசலை படர்ந்தவராய் இருக்கின்றோமே! 1278 தன் தோள்வளைகளை நோக்கி, மென்மையான தோள்களையும் நோக்கி, தன் அடிகளையும் நோக்கி, அவள் செய்த குறிப்பு உடன்போக்கு என்பதே ஆகும். 1279 கண்ணினாலே காம நோயைத் தெரிவித்துப் பிரியாமல்

இருக்கும்படி இரத்தல், பெண்தன்மைக்கு, மேலும் சிறந்த பெண்தன்மை உடையது என்று சொல்லுவர். |280