பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265 128. குறிப்பறிவுறுத்தல்

கரப்பினுங் கையிகந் தொல்லாதின் உண்கண் உரைக்கல் உறுவதொன்று உண்டு. 1271

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோள் பேதைக்குப் பெண்ணிறைந்த நீர்மை பெரிது. 1272

மணியில் திகழ்தரும் நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன் றுண்டு. 1273

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு. 1274

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன்று உடைத்து. 1275

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து. 1276

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை. 7277

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து. 1278

தொடிநோக்கி மென்றோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண்டு அவள்செய்தது. 1279

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு. 1280

10, திரு-எண்க