பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால் - கற்பியல் 272

பரத்தனே! பெண்தன்மை உடையவர் எல்லாரும், பொதுப் பொருளாகக் கொண்டு நின்னைக் கண்ணால் உண்பார்கள். ஆதலால், தின் மார்பை யான் தழுவ மாட்டேன்! 1311 காதலரோடு யாம் ஊடியிருந்தேமாக, அவரும் அவ்வேளையில், யாம் தம்மை, நீடுவாழ்க என்று வாழ்த்துரை சொல்லுவோம் என்று நினைத்துத் தும்மினார்! 1312 மரக்கிளையிலிருந்து கொணர்ந்த பூவைச் சூட்டினாலும், என் காதலி, நீர் இந்த அழகை எவளோ ஒருத்திக்குக் காட்டுவதற்கே எனக்குச் சூட்டினிர் என்று காய்வாள். 1313 'யாரினும் நின்னையே விரும்புகின்றேம் என்று சொன்னேன் ஆக, அவள், 'யாரினும்? யாரினும் என்று கேட்ட வளாக என்னோடும் ஊடிப் பிணங்கினாள். 1314 'இந்தப் பிறப்பிலே தாம் பிரியமாட்டோம் என்று சொன்னேனாக, இனி வரும் பிறப்பிலே பிரிவேம் என்று தான் கூறியதாகக் கருதிக் கண்களில் நீரைக் கொண்டனள். 1315 நின்னை நினைத்தேன்' என்றேன்; நினைத்தது உண்டாயின் மறந்திருந்ததும் உண்டல்லவோ என்னை ஏன் மறந்தீர்? என்று சொல்லி, அவள் தழுவாமல் பிணங்கினாள். 1316 யான் தும்மினேனாக நூறாண்டு என்று கூறி வாழ்த்தினாள்; அடுத்து, அதைவிட்டு, எவர் நினைத்ததனாலே நீர் தும்மினிiர். என்று கேட்டுக் கேட்டு அழுதாள். 1317 அவள் பிணங்குவாள் என்று பயந்து நான் எழுந்த தும்மலையும் அடக்கினோனாக உம்மவர் நினைப்பதை எமக்குத் தெரியாதபடி மறைத்தீரோ? என்று அவள் அழுதாள். 1318 அவள் ஊடிப் பிணங்கியபோது அதைத் தெளிவித்து இன்புறுத்தினாலும், நீர் பிறமகளிர்க்கும் இத்தன்மையரே ஆவீர் என்று, என்மேற் சினம் கொள்வாள். 1319 அவள் அழகையே நினைத்து வியந்து பார்த்தாலும், 'நீர் எவரையோ மனத்திற்கொண்டு எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தீரோ? என்று கேட்டுச் சினம் கொள்வாள். 1320