பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் - இல்லற இயல் 42

அறத்தைப்பற்றி வாயாலும் சொல்லாதவனாய், ஒருவன் தீய செயல்களையே செய்து வந்தாலும், அவன் பிறனைப் பழித்துப் புறங்கூறாதவன் என்பது இனிதாகும். 181 அறத்தையே அழித்துத் தீமைகளைச் செய்துவருவதைக் காட்டிலும், இல்லாதபோது ஒருவனைப் பழித்துப் பேசி, நேரில் பொய்யாகச் சிரிப்பது தீமையாகும். 182 பிறர் இல்லாதபோது அவரைப் புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலைவிட , இறந்துபோதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும். 183 நேரில் நின்று இரக்கம் இல்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசுக நேரில் இல்லாதபோது பின்விளைவைக் கருதாமல் எந்தப் பழியையும் எடுத்துச் சொல்லக் கூடாது. 184 அறநூல்கள் கூறும் உள்ளமுள்ளவனாக ஒருவன் இல்லாத தன்மையினை, அவன் புறங்கூறுகின்றதான அந்த இழி செயலால் தெளிவாக அறியலாகும். 185 பிறனைப் பின்னால் பழித்துப் பேசுபவன், அவனுடைய பழிச் செயல்களுள்ளும் இழிவானதைத் தெரிந்தெடுத்துக் கூறிப் பிறரால் மிகவும் பழிக்கப்படுவான். 186 'மகிழ்ச்சியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவரே, பிறர் தம்மைவிட்டு விலகுமாறு பழித்துப் பேசி, தமக்குள்ள நண்பரையும் பிரித்துவிடுவர். 187 நெருங்கிய நட்பினரின் குற்றத்தையும் புறத்தே பேசித் துற்றும் இயல்பினர். அயலாரிடத்து எப்படி மோசமாக நடந்து கொள்வார்களோ? i88

ஒருவன் இல்லாததைப் பார்த்து, அவனைப்பற்றி இழிவான சொற்களை உரைப்பவனையும், அறத்தைக் கருதியேதான் உலகம் தாங்கிக் கொண்டிருக்கின்றதோ? 189 அயலாரின் குற்றங்களைக் காண்பதுபோலவே தம் குற்றங்களையும் காண்பாரானால், நிலைபெற்ற உயிர்கட்கு எத்தகைய தீமையும் உண்டாகுமோ? 190