பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் துறவற இயல் 54

அருளாகிய செல்வமே செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வம், பொருள்களாகிய பிற வகைச் செல்வங்கள் எல்லாம்

இழிந்தவரிடத்திலும் உள்ளனவே! 24!

நல்ல வழியினாலே ஆராய்ந்து அருளைச் செய்க, பல வழியாக ஆராய்ந்தாலும், அப்படி அருள்செய்தலே உயிருக்கு உறுதுணையாகும். 242 இருள் அடர்ந்திருக்கும் துன்ப உலகமாகிய நரகத்துக்குச் செல்லுதல், அருள்பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு ஒருபோதுமே இல்லையாகும். 243 திலைபெற்ற உலகத்தில் உள்ள உயிர்களைக் காத்து, அருள் செய்து வாழ்கின்றவர்களுக்குத் தம் உயிரைக் குறித்து அஞ்சுகின்ற தீவினைகள் இல்லை! 244 அருள் கொண்டவராக வாழ்பவர்களுக்கு எந்தத் துன்பமுமே இல்லை; காற்று உயிர் வழங்குதலால் வாழும் வளமான பெரிய உலகமே இதற்குச் சான்று. 245

அருள்தலிலே இருந்து விலகித் தீயவைகளைச் செய்து வாழ்கிறவர்களே, உறுதிப்பொருளை இழந்து தம் வாழ்க்கைக் குறிக்கோளையும் மறந்தவராவர். 246

பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகிலே இன்பமான வாழ்க்கை இல்லாததுபோலவே, அருள் இல்லாதவர்களுக்கு மேலுலகத்து வாழ்வும் இல்லை யாகும். 247 பொருள் இழந்தவர்களும் ஒரு காலத்தில் பொருள் வளம் அடைவார்கள். அருள் இல்லாதவரோ அதை இழந்தால் வாழ்வை இழந்தவரே மீண்டும் அடைதல் அரிது. 248 அருள் இல்லாதவன் செய்யும் தருமத்தை ஆராய்ந்தால், தெளிவில்லாதவன் மெய்ந்நூலிற் கூறப்பெற்ற உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றதே! 249 தன்னைவிட மெலிவானவர்மேல் பகைத்துச் செல்லும்போது, தன்னைவிட வலியவர் முன்பாகத் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைவிற் கொள்ளவேண்டும். 250