பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் - துறவற இயல் 62

உலகினரால் இகழப்படாமல் வாழ விரும்புகின்றவன் எத்தகைய பொருளையும் களவாடிக்கொள்ள நினையாதபடி தன் மனத்தை முதலில் காத்தல் வேண்டும். 28? பிறன் பொருளைக் கள்ளமாகக் களவாடிக் கொள்வோம் என்று ஒருவன், தன் உள்ளத்தால் நினைத்தாலும் அந்த நினைவுகூடத் தீமையானதே 282 களவாலே வந்தடையும் செல்வமானது அளவுகடந்து பெருகுவதுபோலவே, எதிர்பாராமல், எல்லாம், வந்தது போல விரைந்து ஒழிந்தும் போய்விடும். 283 களவு செய்வதிலே உண்டாகும் முதிர்ந்த விருப்பமானது, அதனால் வரும் விளைவுகளின்போது தீராத துன்பத்தைத் தருவதாகவே விளங்கும். 284 பொருள் தேடுதலையே நினைத்துப் பிறர் சோர்ந்திருக்கும் காலத்தைப் பார்க்கும் கள்வரிடத்தே, அருளைக் கருதி அன்புடையவராதல், சான்றோரிடமும் இல்லை. 285 களவுநெறியின்கண் மிக முதிர்ந்த ஆசையுடையவர்கள் எல்லாரும், தம் வருவாயின் அளவுக்குத் தகுந்தபடி ஒழுக்கத்தோடு வாழ இயலாதவர்களே. 286 'களவு' எனப்படும் இருள்படர்ந்த அறிவாண்மையானது, அளவறிந்து வாழும் ஆற்றலை விரும்பிய நன்மக்களிடத்திலே ஒருபோதும் இல்லை யாகும். 287 அளவறிந்து வாழ்தலை அறிந்தவரின் நெஞ்சத்திலே 'அறம்' நிற்பதுபோல, களவுத்தொழிலை அறிந்தவரின் நெஞ்சிலே 'வஞ்சகம் எப்போதும் நிலைத்திருக்கும். 288 களவு அல்லாத, பிற நல்ல முயற்சிகளைச் செய்து பொருள் தேடி வாழ்தலைத் தெளியாதவர்கள், அளவுகடந்த செலவுகளைச் செய்து அக்களவாலேயே அழிவர். 289 களவு செய்வார்க்கு, உடலில் உயிர் நிலைக்கும் காலமும் தவறிப் போகும் களவு செய்யாதவர்க்குத் தேவருலகத்து வாழ்வும் தவறிப் போகாது. 290