பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் - துறவற இயல் 66

தனக்குச் செல்லக்கூடிய இடத்திலும் சினத்தைக்காப்பவனே காப்பவன்; செல்லாத இடத்திலே காத்தால் என்ன? காவாதிருந்தால் என்ன? 30? செல்லாத இடத்திலே சினம் கொள்வதனால் தீமை வரும்: செல்லும் இடத்திலும் அதனிலும் தீமையானது வேறு ஏதும் இல்லை. 302 எவரிடத்திலும் சினங்கொள்ளாமல், அவர் தீச்செயலை மறத்தலே நல்லது தீமையான விளைவுகள் அச்சினத்தினாலே வந்து சேரும். 303 முகமலர்ச்சியான நகையையும், அகமலர்ச்சியான உவகையையும் கொல்லும் சினத்தினும், உயிருக்குப் பகையானவை வேறு உளவோ? 304 ஒருவன் தன்னைக் காக்க விரும்பினால் சினம் எழாமல் காத்துக் கொள்க; காவாதிருந்தால், அச் சினமானது அவனையே முடிவில் கொன்றுவிடும். 305

சேர்ந்தவரைக் கொல்லும் இயல்புடைய சினமானது, தன் இனத்தார் என்னும் பாதுகாவலான தெப்பத்தையும் சுட்டு எரித்துவிடும். 306 சினத்தையே செல்வம் என்று நினைத்து மேற்கொண்டவன் அதனாற் கெடுதல், நிலத்திலே அறைந்தவனின் கையானது நோவிலிருந்து தப்பாததுபோல் உறுதியாகும். 307 பலமாகக் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் வீழ்ந்தாற் போன்ற துன்பத்தை ஒருவன் செய்தபோதும், கூடுமானால், அவன்பால் வெகுளாமையே நன்று. 308 ஒருவன் உள்ளத்தாலும் சினத்தைப்பற்றி நினையாதவன் என்றால், அப்படிப்பட்டவன் நினைத்தது எல்லாம் உடனே அவனை வந்தடையும். 309 அளவுகடந்து சினத்திலே ஈடுபட்டவர் இறந்தவரைப் போன்றவர்; சினத்தைக் கைவிட்டவரோ முற்றும் துறந்த மேலோருக்குச் சமமாவர். 310