பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் - துறவற இயல் 74

எந்த எந்தப் பொருளில் ஆசைகொள்வதிலிருந்து ஒருவன் விடுபட்டவன் ஆகின்றானோ, அந்த அந்தப் பொருளைக் குறித்து அவன் துன்பம் அடைவதில்லை. 34} துன்பம் இல்லாத வாழ்வை விரும்பினால், ஆசைகளை எல்லாம் விட்டுவிட வேண்டும் அப்படி விட்டு விட்டபின் இவ்வுலகில் அடையக்கூடிய இன்பம் பலவாகும். 342 ஐந்து வகையான புலன்களின் ஆசைகளையும் அடக்கி வெற்றி கொள்ள வேண்டும்; அதற்கு வேண்டிய பொருளாசைகளை ஒருசேர விட்டுவிட வேண்டும். 343 ஒரு பொருளின்மீதும் ஆசை இல்லாததே தவநெறியின் இயல்பாகும்; ஆசை உள்ளதானால் மீளவும் உலகபோகத்தில் மயங்கியதே யாகும். 344 பிறவியாகிய துன்பத்தை ஒழிக்க முயல்பவருக்கு உடம்பும் மிகையான ஒரு பொருள்; ஆகவே, மற்றயை ஆசைத் தொடர்புகள் எல்லாம் எதற்காகவோ? 345 உடலை யான் எனவும், பொருள்களை எனது' எனவும் நினைக்கின்ற மயக்கத்தை அறுத்துவிடுகிறவன், வானோர்க்கும் உயர்ந்த உலகம் சேர்வான். 346 பொருள்கள்மீதுள்ள பற்றுகளையே இறுகப் பற்றிக்கொண்டு ஆசையை விடாதவர்களுக்குத் துன்பங்களும் பற்றிக் கொண்டு விடாமல் இருக்கும். 347 அனைத்தையும் துறந்தவர்களே மேலான நிலையினர் ஆவர்; மற்றையோர் மயங்கி ஆசை வலையில் அகப்பட்டுக்கொண்ட வர்களே ஆவர். 348 பற்றுகள் அறுந்துபோன அப்பொழுதே பிறப்பாகிய பந்தமும் அறுந்து போகும். மேலும், உலக நிலையாமையும் அப்போது காணப்படும். 349 பற்று இல்லாதவனான இறைவனது பற்றினை மட்டுமே பற்றுக உலகப் பற்றுகளை விடுவதற்காக, அதனையே எப்போதும் விடாமல் பற்றிக் கொள்க. 350