பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சொற்கள்-அரசன் கொடியன் என்று கூறும் சொற்கள், அரசனுடைய ஆயுளையே குறைத்துவிடும் என்று நான்காம் பாடல் குறிக்கின்றது. மக்கள் நெஞ்சு நொந்து சொல்லும் சொற்கள் இன்னாச் சொல் என்று கூறப்பட்டது. வெங்கோலன், இறைகடியன், இன்னாமுகத்தனன், கடுஞ் சொல்லன், எண்ணாத வேந்தன், கடுங்கோல், என்பவ்ைகளெல்லாம் வெருவந்த செய்தொழுகும் வேந்த னின் கொடிய ஆட்சியினைக் குறிப்பனவாகும். 58. கண்ணோட்டம் தன்னோடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுக்கமாட்டாமையாகும். இரக்கம், கருணை கொண் டிருப்பதையும் கொண்டதாகும். தாட்சண்யம்" என்று நடைமுறையில் கூறப்படுவதும் உண்டு. உலகியல் நடை பெறுவதற்குக் கண்ணோட்டம் இன்றியமையாததாகும், முதலிரண்டு குறட்பாக்களும் கண்ணோட்டம் என்பதன் சிறப்பினைக் கூறுகின்றன. மூன்று, நான்கு, ஐந்து பாடல்கள் கண்ணோட்டமில்லாத கண்ணின் குற்றத்தைக் கூறுகின்றன. ஆறு, ஏழு பாடல்கள் கண்ணோட்டம் இல்லாதாரது இழிவினைக் கூறுகின்றன. - எட்டாம் பாடல் கண்ணோட்டம் இருத்தல் வேண்டும் என்றும் அதனைச் செய்யுமாறும் கூறுகின்றது. தமக்குக் குற்றம் செய்தவரிடத்தும் கண்ணோட்டம் செய்தல் கண்ணோட்டமுள்ளவரிடத்தில் காணப்படவேண்டும் என் பதனை ஒன்பது, பத்தாம் பாடல்கள் தெரிவிக்கின்றன. கண்ணோட்டத்தினை சிறப்புடைய அழகு என்று முதற். குறட்பா கூறும். அரசர்க்கு இது மிகவும் இன்றியமையாத தாகும். உலகநடை என்பது ஒப்புரவு செய்தல், புறந்தருதல், பிழைத்தன பொறுத்தல் முதலியனவாகும். இதனை இரண்டாம் குறட்பா விளக்கம் செய்கிறது. மூன்றாம்.