பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 உயர்வாகத் தெளிவுபடுத்துகிறது. மன்னர்கள் எக்காலத்தி, ஆம் விழிப்புணர்ச்சியுடனே இருக்க வேண்டும். அவர்களே குடிமக்களின் தலைவர்கள் ஆவார்கள். பத்தாம் குறட்பா வில் கூறிய கருத்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதொன்றா கும். அடியால் அளந்தவன் கடந்த பரப்பு முழுவதையும். மடியிலா மன்னவன் அடைய முடியும் என்று கூறுகிறது. இக். குறட்பாவில், தாவியது" என்பது 'தாயது என்று, குறைந்து நின்றது. உலகவழக்கில் அமைத்து ஆசிரியர் இதனைக் கூறி, மடியிலாதவன் சிறப்பினை எடுத்துக். காட்டினார். உலக முழுதும் அடியால் அளந்தவன் தான் கடந்து சென்ற பரப்பு முழுதுமே மடியில்லாதவன் முயற்சியால் அடைவான். உலகத்தினை அடியால் அளந்தவன் என்பது உலகவழக்கில் காண்பதாகும். 62. ஆள்வினையுடைமை இடைவிடாத மெய்ம் முயற்சியுடையனாதல் என்பத. னைக் கூறுவதாகும். அது ஆளும் தொழிலெனக் காரியத், தின் மேல் வைத்துக் கூறப்பட்டதாகும். முதன் மூன்று. பாக்களும் முயற்சியினது சிறப்பினைக் கூறுகின்றன. நான்காம் பாடல் முயற்சி இல்லாதவனுடைய குற்றத். தினைக் கூறுகின்றது. முயற்சியுடையவனது நன்மையினை: ஐந்தாம் பாடல் கூறும். ஆறாவது, ஏழாவது பாடல்கள் முயற்சி உடையவனைப் பற்றியும் அது இல்லாதவனைப். பற்றியும் தெளிவுப்படுத்துகின்றன. கடைசி மூன்று பாடல் களும் தெய்வத்தால் துன்பம் நேர்ந்தபோதும் முயற்சி விடப். பயக் கூடியதன்று என்பதனைச் சிறப்பாக எடுத்து விளக்கு கின்றன.